Saturday, 19 August 2017

முக்கால் ஏக்கரில் 30 நஞ்சில்லா காய்கறிகள் Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

முக்கால் ஏக்கரில் 30 நஞ்சில்லா காய்கறிகள் பழமரங்கள் வளர்க்கும் ஒரு தனியார் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றும் ஜெயப்பிரகாஷ #saringo #saringovivasayam
இயற்கை விவசாயமும் செய்து… காய்கறிகளை தனது வீட்டில் வைத்தே விற்பனை செய்து வருகிறார். ஒரு விடுமுறை நாளில், குடும்ப சகிதமாக தோட்டத்தில் இருந்த ஜெயப்பிரகாஷைச் சந்தித்தோம்.
Image may contain: plant and flower “நிலம் தயாரானதும், இயற்கை விவசாயம் செய்றதுக்கான வழிமுறைகளைத் தேட ஆரம்பித்தேன். அந்த சமயத்துல (2010-ம் ஆண்டு) கோயம்புத்தூர் கொடீசியா அரங்குல நடந்த அக்ரி-இன்டெக்ஸ் வேளாண்மைக் கண்காட்சியில் பசுமை விகடன் ஸ்டாலுக்குப் போனேன். அங்க, அத்தப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ சுப்பையனைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவர்தான், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இடுபொருட்களைத் தயார் பண்ற விதங்களைக் கத்துக் கொடுத்தார். அவரோட ஆலோசனைப்படி, 10 சென்ட்ல கீரை, கத்திரி, தக்காளி, சின்னவெங்காயம் நாலையும் நடவு செய்தேன்.
ஏற்கெனவே தோட்டத்தில் இருந்த நாட்டு ரக தென்னை மரங்களையும் இயற்கை முறையில் பராமரிக்க ஆரம்பித்தேன். சோதனை முறையில நடவு செய்த காய்கறிகளை வீட்டுத்தேவைக்கு வெச்சிக்கலாம்னு நினைச்சோம்” என்ற ஜெயப்பிரகாஷைத் தொடர்ந்து பேசினார், அவர் மனைவி கீதாப்ரியா.
வீட்டுக்காய்கறி வியாபாரமாகியது!
“அப்படி இவர் கொண்டு வர்ற காய்கறிகள்ல வீட்டுக்கு எடுத்தது போக மீதியை அப்பப்போ பக்கத்து வீடுகளுக்கு இலவசமா கொடுத்துடுவேன். அதை சமைச்சுப் பார்த்தவங்க எல்லாரும், ‘ரொம்ப ருசியா இருக்கு. ரெண்டு மூணு நாள் கூட வாடறதில்லை’னு சொல்லி ‘எங்களுக்கு இனிமே ரெகுலரா விலைக்கே காய்களைக் கொடுங்க’னு கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பறம்தான் கொஞ்சம் கொஞ்சமா சாகுபடிப்பரப்பை அதிகரிக்க ஆரம்பித்தோம். இப்போ முக்கால் ஏக்கர்ல காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்து விற்பனை செய்துக்கிட்டிருக்கோம்” என்றார்.
ஊடுபயிராக விளையும் காய்கறிகள்!
தொடர்ந்து பேசிய ஜெயப்பிரகாஷ், “மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல தென்னை இருக்கு. 20 சென்ட் இடத்துல பண்ணை வீடு, களம் இருக்கு. மீதமுள்ள இடங்கள்ல சீதா, நாவல், கொய்யா, எலுமிச்சை, திராட்சை, சப்போட்டானு பழமரங்கள் இருக்கு. இந்தச் செடிகளுக்கு இடையிலதான் காய்கறி, கீரைகளை சாகுபடி செய்றோம். வெண்டை, தக்காளி, கத்திரி, பூசணி, அவரை, சுரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைகோஸ், பொன்னாங்கண்ணி, புதினானு 30 விதமான பயிர்கள் இருக்கு. மகோகனி, குமிழ், நீர்மருது, வேங்கை, செம்மரம், ஈட்டி, சந்தனம், நோனி, புன்னை, நாகலிங்கம், மகிழம், மருதுனு பலவகையான மரங்களும் இருக்கு. முழுநேர விவசாயியா இல்லாததால, இப்போதைக்கு பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம்னு எல்லாத்தையும் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துறோம்.
வாரந்தோறும் வருமானம்!
வாராவாரம் சனிக்கிழமை மட்டும் காய்கறிகளை விற்பனை செய்றோம். வாரம் 60 கிலோ அளவுக்கு காய்கறிகளையும் 100 கட்டு கீரைகளையும், 200 தேங்காய்களையும் விற்பனை செய்றோம்.
எந்த காயா இருந்தாலும் கிலோ 50 ரூபாய்னும் ஒரு கட்டு கீரை 15 ரூபாய்னும், ஒரு தேங்காய் 15 ரூபாய்னும் விலை வைத்து விற்பனை செய்றோம். அந்தக் கணக்குல வாரத்துக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகுது. எங்களுக்கு இடுபொருட்கள், போக்குவரத்துக்கே நிறைய செலவாகிடும். எல்லாம் போக வாரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் லாபமா நிக்கும். இந்த லாபம் குறைவுனாலும், விஷமில்லாத காய்கறிகளை எல்லோருக்கும் கொடுக்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது” என்றார்.
நிறைவாகப் பேசிய ஜெயப்பிரகாஷ்-கீதாப்ரியா தம்பதியர், “விவசாயம் சொல்லிக்கொடுக்க இங்க யாரும் இல்லாத சூழலில் என் போன்றவர்களுக்கு முன்னோரின் தொழில்நுட்பங்களை, பழைய தகவல்களை பசுமை விகடன்தான் மீட்டுக் கொடுத்துக்கிட்டிருக்கு.
தொடர்புக்கு :
சி.ஆர்.ஜெயப்பிரகாஷ்,
செல்போன்: 09894259100
Image may contain: plant, food and nature
Image may contain: plant, nature and outdoor

No comments:

Post a Comment

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! Ganesh Integrated Farm Attur (Agriculture News Tamil)

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! குடம்புளி என்பது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ...