ஆண்டுக்கு ரூ 3,80,400 லாபம் கொடுக்கும் செம்பருத்தி!
தினசரி வருமானம் தரக்கூடிய விளைபொருள்களில் மலர்கள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. பூஜைசெய்ய, மாலைக்கட்ட, மணமேடை அமைக்க... எனப் பலவித பயன்பாட்டுகளுக்கான மலர்கள் சாகுபடியோடு, மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மலர்களையும் சாகுபடி செய்து வருகிறார்கள், விவசாயிகள். அந்தவகையில், சித்த மருத்துவத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் செம்பருத்தியை இயற்கை முறையில் சாகுபடி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார், ஆஸ்டின் கிருபாகரன்.
படித்தது பொறியியல்... பார்ப்பது உழவியல்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி தாலூகா பருத்திப்பாட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்வாநேரி கிராமத்தில் இருக்கிறது ஆஸ்டின் கிருபாகரனின் செம்பருத்தித் தோ
ட்டம். செம்பருத்திப் பூக்களைக் காயவைத்துக் கொண்டிருந்த ஆஸ்டின் கிருபாகரனைச் சந்தித்தோம்.
பொடியாக அரைத்து விற்பனை :
“இந்த இடம் மொத்தம் 10 ஏக்கர். ஒரு ஏக்கர் நிலத்துல மட்டும்தான் செம்பருத்தி போட்டிருக்கேன். மீதி ஒன்பது ஏக்கர் நிலம் சும்மாதான் இருக்கு. இது, செம்மண் கலந்த களிமண் பூமி. செம்பருத்தி நல்லா விளையுது. இப்போ தினமும் சராசரியா 10 கிலோ பூ கிடைச்சுட்டிருக்கு. ஆரம்பத்துல பூக்களைக் காய வெச்சு கோயம்புத்தூருக்கு அனுப்பிட்டு இருந்தேன். சீனாவில் இருக்கிற ஒரு நண்பர் மூலமா, செம்பருத்திப் பொடியில் ஜூஸ் தயாரிச்சு விற்பனை செய்றதைக் கேள்விப்பட்டேன். அதேபோல பெங்களூர்ல இதில் தேநீர்ப் பானம் தயாரிக்கிறதைக் கேள்விப்பட்டேன். அதுக்கப்புறம்தான் இதைப் பொடியா அரைக்கிற யோசனை வந்தது.
இப்போ ஆறு மாசமாதான் பொடியாக்கி விற்பனை செய்துட்டு இருக்கேன். ஆனா, அதுக்கு விற்பனை வாய்ப்புக் குறைவா இருக்குறதால, காய்ந்த பூவாவும் விற்பனை செய்றேன். பொடியைத் திருநெல்வேலியில் இருக்கிற இயற்கை அங்காடிகளுக்கும் சித்த மருத்துவர்களுக்கும் கொடுத்துட்டு இருக்கேன். அதில்லாம நண்பர்கள், சொந்தக்காரங்கன்னு நேரடியா என்கிட்ட வாங்கிக்கிறாங்க. பொடியா விற்பனை செய்யறப்போ லாபம் அதிகமா கிடைக்குது. அதனால, ஆர்டர் அதிகமாச்சுனா விளையுற எல்லாத்தையும் பொடியாவே மாத்தி விற்பனை செய்திடுவேன்” என்ற ஆஸ்டின் கிருபாகரன், நிறைவாக வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
மாதம் 58 ஆயிரத்து 800 ரூபாய்
தினமும் கிடைக்கிற 10 கிலோ பூவைக் காய வெச்சா நாலு கிலோ காய்ந்த பூ கிடைக்கும். அந்த வகையில மாதம் 120 கிலோ காய்ந்த பூ கிடைக்குது. மாசம் 30 கிலோ பூவை மட்டும் பொடியா அரைக்கிறேன். ஒரு கிலோ காய்ந்த பூவைப் பொடியாக்கினால், 800 கிராம் பொடி கிடைக்கும். 30 கிலோ காய்ந்த பூ மூலமா 24 கிலோ பொடி கிடைக்குது. ஒரு கிலோ பொடி 1,000 ரூபாய்னு விற்பனையாகுது.
ஒரு கிலோ காய்ந்தப் பூ 320 ரூபாய்க்கு விற்பனையாகுது. அந்தக் கணக்குல 90 கிலோ காய்ந்த பூ மூலமா 28 ஆயிரத்து 800 ரூபாய் கிடைக்கும். மொத்தமாகப் பார்த்தா, மாசம் 52 ஆயிரத்து 800 ரூபாய் வருமானமாக் கிடைச்சுட்டு இருக்கு. அதனால, பொடி விற்பனையை அதிகமாக்குறதுக்கு முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.
வருஷத்துக்குன்னு கணக்கு பார்த்தா 9 மாசம்தான் பூ கிடைக்கும். அந்த வகையில போன வருஷத்துல 4 லட்சத்து 75 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைச்சுது. அதுல 94 ஆயிரத்து 800 ரூபாய் செலவு போக மீதம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 400 ரூபாய் லாபமா நின்னது. அதிகப் பாடு இல்லாம, வேலையாள் இல்லாம மாசாமாசம் கணிசமான வருமானம் கொடுக்குற பயிர் செம்பருத்திங்கிறதுல மாற்றுக்கருத்தே இல்லை” என்றவாறு கை நிறையச் செம்பருத்திப் பூக்களை அள்ளிக்காட்டி சிரித்தார், ஆஸ்டின் கிருபாகரன்.
தொடர்புக்கு,
ஆஸ்டின் கிருபாகரன்
செல்போன்: 99420 81809
அதிக ஊட்டம் கொடுக்கக் கூடாது!
ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...
செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது, இரண்டு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது, ஆறு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். பிறகு சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும் தலா ஒரு கிலோ அளவு மட்கிய சாணம் இட்டு, தண்ணீர்விட்டு ஒரு வாரம் ஆறவிட வேண்டும். குழியின் நடுவில் கன்றை நடவு செய்து, மேல் மண் கொண்டு மூடி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்யும் போது ஒன்றரை மாத வயதுள்ள கன்றுகளை வாங்குவது நல்லது. கன்றுகளை வாங்கும்போதே 200 கன்றுகளாகச் சேர்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். நடவு செய்த பிறகு, சரியாக வளராத கன்றுகளை அப்புறப்படுத்திவிட்டு இந்தக் கன்றுகளை நடவு செய்துகொள்ள வேண்டும். நடவு செய்த 10-ம் நாள் செடிகளின் தூரில் மண் அணைத்துவிட வேண்டும். மண் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
அளவான ஊட்டம் கொடுத்தால் போதும்!
நடவு செய்த இரண்டாம் மாதத்தில் இருந்து, மாதம் ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். செம்பருத்திக்கு அதிக ஊட்டம் கொடுத்தால், இலைகள் சிவப்பு நிறத்துக்கு மாறுவதோடு பூக்கள் பூக்காது. அதனால் அளவாகக் கொடுத்தால் போதுமானது.
பருவமழைக்கு முன் கவாத்து!
கன்று நடவு செய்து இரண்டு ஆண்டுகள் கழித்து, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக, தரையில் இருந்து ஓர் அடி மட்டும் இருக்குமாறு மரங்களைக் கவாத்து செய்ய வேண்டும்.
இதனால், மூன்று மாதங்களுக்குப் பூ கிடைக்காது. ஆனால், மீண்டும் தழைத்து வரும்போது அதிகப் பூக்கள் கிடைக்கும். கவாத்து செய்யாமல்விட்டால், மரமாக வளர்ந்து மகசூல் குறைந்துவிடும். ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்துவந்தால், 20 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். களைகள் மண்டினால், அவ்வப்போது அகற்ற வேண்டும்.
மாவுப்பூச்சியை விரட்டும் இஞ்சி-பூண்டு கரைசல்!
செம்பருத்தியின் இலை, தண்டுகளில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. அதனால், 20 நாள்களுக்கு ஒருமுறை இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைகிலோ அளவு எடுத்து உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஆறு நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால் கரைசல் தயார்.
10 லிட்டர் தண்ணீரில், 150 மில்லி கரைசல், 30 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
ஈரம் படக்கூடாது!
நடவுசெய்த 6-ம் மாதத்துக்குப் பிறகு பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். 9-ம் மாதத்தில் இருந்து, பூக்கள் அதிகரித்து 12-ம் மாதத்துக்கு மேல் முழு மகசூல் கிடைக்கும். தினமும் பூக்களைப் பறித்து உலர்த்தியோ, பொடி செய்தோ விற்பனை செய்யலாம்.
காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் பூக்களைப் பறித்து பாலித்தீன் சாக்கில் கொட்டி, இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும். பிறகு, அவற்றைச் சேகரித்து வைக்கலாம். ஈரம் படாமல் பார்த்துக்கொண்டால் பல மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம். ஈரம்பட்டால் பூஞ்சணம் தாக்கிவிடும்.

No comments:
Post a Comment